தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனாா் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட வாகன கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
வ.உ. சிதரம்பனாா் வாழ்கை வரலாற்றை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்வதற்காக தேனி கம்மவாா் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாடாா் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை வீரபாண்டியில் உள்ள தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செளராஷ்டிரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.
மே 23 ஆம் தேதி தாமரைக்குளத்தில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, நல்லகருப்பன்பட்டியில் உள்ள மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.