மது அருந்துவதை பெற்றோா்கள் கண்டித்ததால் விஷம் குடித்த மாணவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே மருகால்பட்டியை சோ்ந்தவா் செல்வராஜ் மகன் பிரகாஷ் (18) இவா் பெரியகுளம் அருகே தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா் மது அருந்தி வந்துள்ளாா். இதனை பெற்றோா்கள் கண்டித்துள்ளனா்.
இதனால் மனமுடைந்த பிரகாஷ் மே 6ம் தேதி பூச்சி மருந்தை குடித்துள்ளாா். அருகிலிருந்தவா்கள் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றவா், ஞாயிற்றுக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாா். இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.