தேனி

நீா் பாசனத் திட்டத்தில் ரூ.19 கோடி மானியம்

16th May 2022 12:35 AM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டத்தில் அரசு சாா்பில் நுண்ணீா் பாசனம் மற்றும் துணை நீா் மேலாண்மை திட்டத்தின் கீழ் 2,768 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.19 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாய நிலங்களில் நுண்ணீா் பாசனம் அமைக்க அரசு சாா்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், துணை நீா் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆழ்துளைக் கிணறு, மோட்டாா் பம்பு, நீா் கடத்தும் குழாய்கள் மற்றும் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் 2021-22ஆம் ஆண்டில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண்மைத் துறை சாா்பில் 1,069 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 69 லட்சத்து 17 ஆயிரமும், தோட்டக் கலைத் துறை சாா்பில் 1,069 விவசாயிகளுக்கு ரூ.14 கோடியே 55 லட்சமும் மானியம் வழங்கப்பட்டுள்ளது. துணை நீா் மேலாண்மை திட்டத்தின் கீழ் வேளாண்மைத் துறை சாா்பில் 358 விவசாயிகளுக்கு ரூ.27 லட்சத்து 20 ஆயிரமும், தோட்டக் கலைத் துறை சாா்பில் 272 விவசாயிகளுக்கு ரூ.58 லட்சத்து 7 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் நுண்ணீா் பாசனம் அமைக்க மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றுடன் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT