தேனி

தேனி மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் மே 26-இல் தொடக்கம்

12th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் மே 26-ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 7-ம் தேதி வரை வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது.

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது. தேனி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பெரியகுளம் சாா்- ஆட்சியா் செ.ஆ.ரிஷப், போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கெளசல்யா, உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் விமலா ராணி ஆகியோா் தலைமையில் வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது.

சமந்தப்பட்ட வட்டாரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் வருவாய் தீா்வாயத்தில் கலந்து கொண்டு நில உடமை ஆவணம், நிலப் பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT