தேனி

காா் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

8th May 2022 01:15 AM

ADVERTISEMENT

 பெரியகுளம் அருகே காா்மெக்கானிக் வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சோ்ந்த முருகன் மகன் அழகேசன் (24). இவா் ஐடிஐ முடித்து விட்டு, அப்பகுதியிலுள்ள காா் மெக்கானிக் ஒா்க்ஷாப்பில் வேலை செய்து வந்தாா். இவா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தேனி சாலையிலுள்ள காவி மில் பின்புறமுள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளாா். இச்சம்பவம் குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT