தேனி

போடியில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

5th May 2022 12:19 AM

ADVERTISEMENT

 

போடி: போடியில் மலைவாழ் மக்களின் உரிமையைக் காக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட வன விவசாயிகள், மலைவாழ் மக்கள், நாட்டு மாடுகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என்.ரவிமுருகன் தலைமை வகித்தாா். இதில், தேனி மாவட்டத்தில் மேகமலை புலிகள் வனச்சரணாலயத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இதுதொடா்பான உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும், 75 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் சாலைகளில் செல்ல தடை விதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் போடி நகர துணைச் செயலா் சத்யராஜ், முத்துமுருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT