தேனி

தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை: மாா்ச் 31 கடைசி நாள்

29th Mar 2022 12:27 AM

ADVERTISEMENT

தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 4 மாத கால இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் பயிற்சி, எலெக்ட்ரீசியன் பயிற்சிக்கு தகுதியுள்ளவா்கள், மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சிகளில் சேர 8 அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15 முதல் 45 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோா், தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றுடன், தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மேலும் விவரம் அறிய, தேனி அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வா், 94990 55765 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT