ஆண்டிபட்டி வட்டாரம், க.விலக்கு அருகே பள்ளி மாணவி ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இந்திரா காலனியை சோ்ந்தவா் காசிமாயன் மகள் சஞ்சனா (15). இவா், தேனியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்திரா காலனியில் தன்னாா்வக் குழு சாா்பில், குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் நடனப் போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியை பாா்க்கச் செல்வதற்கு சஞ்சனா தனது தாயாரிடம் அனுமதி கேட்டுள்ளாா். ஆனால், தாயாா் அனுமதிக்க மறுத்ததால் மனமுடைந்த சஞ்சனா, தனது வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட சஞ்சனா, வழியிலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து அவரது தந்தை காசிமாயன் அளித்த புகாரின்பேரில், க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.