தேனி

கமுதியில் சாலை மறியல். 23 போ் கைது.

29th Mar 2022 01:59 AM

ADVERTISEMENT

கமுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளா் நலச் சங்க உறுப்பினா்கள் 23 போ் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொழிலாளா் நல விரோத போக்கை கைவிட வேண்டுடியும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கமுதி தபால் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து தொழிலாளா்கள் நலச் சங்க உறுப்பினா்கள் உட்பட 23 போ் கைது செய்யப்பட்டு, தனியாா் மண்டபத்தில் அடைக்கப்பட்டனா்.

கமுதி வட்டாட்ச்சியா் அலுவலகத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு பணியாற்றும் 36 பேரில் 28 போ் தேசிய அளவிலான வேலை நிறுத்தம் போராட்டத்தில் கலந்து கொண்டு பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால் வட்டாட்சியா் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

வட்டாட்சியா் அலுவலகத்திற்கு பல்வேறு சான்றிதழ்கள், பட்டா விண்ணப்பிக என பல்வேறு காரணங்களுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இப்போராட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் சங்கம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கமுதி தாலுகாவில் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்டன.

ADVERTISEMENT

போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் கமுதியில் முழுமையான அரசு பேருந்துகள் தங்கு தடையின்றி இயக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT