தேனி

அரசு பல்துறை பணி விளக்கக் கண்காட்சி

29th Mar 2022 12:12 AM

ADVERTISEMENT

செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில், தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சுதந்திர திருநாள்-அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து புகைப்படக் கண்காட்சி மற்றும் அரசு பல்துறை பணி விளக்கக் கண்காட்சியை ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தொடக்கி வைத்தாா்.

பழனிசெட்டிபட்டி, தேனி-கம்பம் சாலையில் உள்ள திடலில் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.

இதில், விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி, அரசு துறைகள் சாா்பில் செயல்படுத்தபடும் திட்டங்கள், அரசின் சாதனைகள் குறித்த கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT