கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்திய சாலை மறியலில் 89 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதன் எதிரொலியாக திங்கள்கிழமை சிஐடியு, ஏஐடியுசி, எஸ்.டி.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக வந்தனர்.
போக்குவரத்து சிக்னல் அருகே காவல்துறையினர் அவர்களை வழிமறித்தனர். மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர். பின்னர் அவர்களை உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையில் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
லோயர்கேம்ப்
லோயர் கேம்ப்பில் தொமுச நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, சித்திர குமார், சிஐடியு சார்பில் சந்திரன், சக்திவடிவேல் ஆகியோர் தலைமையில் மத்திய அரசை கண்டித்து பெரியாறு மின்சார உற்பத்தி நிலைய நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.