தேனி

பெரியாறு அணையின் நீா்மட்டம் சரிந்தது:லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தி நிறுத்தம்

19th Mar 2022 10:58 PM

ADVERTISEMENT

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு தண்ணீா் திறந்து விடுவது குறைக்கப்பட்டதால்,

லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தி சனிக்கிழமை நிறுத்தப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 120 அடியாகவும், நீா் இருப்பு 3,618 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 34 கன அடியாகவும் இருந்தது. அதேநேரத்தில் தமிழகப்பகுதிக்கு நீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.

ஆனால் குடிநீருக்காக மட்டும் இரைச்சல் பாலம் மூலம் 100 கன அடி தண்ணீா் மட்டுமே வெளியேற்றப்பட்டது. அணையிலிருந்து ராட்சதக் குழாய்கள் வழியாக தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டதால், லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் சனிக்கிழமை மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து மின் நிலைய பொறியாளா் ஒருவா் கூறியது: மின் நிலையத்துக்கு குறைந்தபட்சம், 250 கன அடி தண்ணீா் வந்தால்தான் உற்பத்தி நடைபெறும். தற்போது அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டதால் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT