தேனி

மக்களை தேடி நகர்மன்றம்: பொறுப்பேற்ற நகர்மன்றத் தலைவர் அறிவிப்பு

14th Mar 2022 01:41 PM

ADVERTISEMENT

கம்பம்: மக்களை தேடி நகர்மன்றம் என்ற இலக்கில் செயல்படுவோம் என்று தலைவர் வனிதா நெப்போலியன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டு கவுன்சிலர்களிடையே பேசினார்.

தேனி மாவட்டம் கம்பம் நகர்மன்றத் தலைவராக வெற்றி பெற்ற வனிதா நெப்போலியன் திங்கள்கிழமை நகர்மன்ற தலைவராகவும், துணைத் தலைவராக சுனோதா  செல்வகுமாரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பின்னர் கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளிடையே பேசிய நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் கூறும்போது, 33 வார்டுகளிலும் நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி பொறியியல், சுகாதார பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளை இணைத்து கட்செவி அஞ்சல் குழு ஒன்றை  ஏற்படுத்த உள்ளோம்.

அதில் தங்களது வார்டு குறைகளை கவுன்சிலர்கள் பதிவேற்றம் செய்ததும், அதிகாரிகள் இடத்தை நேரில் ஆய்வு செய்து இத்தனை நாட்களுக்குள் சரி செய்யப்படும் என்று பதில் தெரிவிப்பார். இதன் மூலம் தங்களது வார்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம், அதில் ஏதேனும் குறை ஏற்பாட்டால் தலைவரிடம் தெரிவிக்கலாம் என்றார்.

ADVERTISEMENT

பின்னர் 1-வது வார்டு கோம்பை சாலை, 3வது வார்டு சங்கிலி நகர் மற்றும் 32 ஆவது வார்டு நந்தகோபால் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை நகர்மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், கவுன்சிலர்கள் பார்வையிட்டனர். உடன் நகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ் குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

இந்நிகழ்வில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT