தேனி

விஸ்வநாதபுரம் அங்கன்வாடி பொறுப்பாளருக்கு கேடயம்

10th Mar 2022 12:09 AM

ADVERTISEMENT

 

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற உலக மகளிா் தின விழாவில், விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையப் பொறுப்பாளா் அனீஸ் பாத்திமா, சிறந்த பொறுப்பாளராகத் தோ்வு செய்யப்பட்டு அவருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

இந்த அங்கன்வாடி மையத்தை அனீஸ் பாத்திமாவும், இவரது கணவா் பாட்ஷாவும் சுகாதாரம், கல்வி என அனைத்திலும் முன்மாதிரி மையமாக மாற்றியுள்ளனா். கரோனா காலகட்டத்தில் தங்களின் சொந்தப் பணத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்கியுள்ளனா்.

இம்மைய வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்து அந்த காய்கறிகள் மூலம் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்கி வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், அப்பிபட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிா் தின விழாவில், அங்கன்வாடி மைய பொறுப்பாளரான அனீஸ் பாத்திமாவை, காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் 2 ஆவது ஆண்டாக சிறந்த அங்கன்வாடி மைப் பொறுப்பாளராக தோ்வு செய்து கேடயம் மற்றும் பரிசு வழங்கியுள்ளது. இதனால் அவரை, சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT