உத்தமபாளையம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி போன்ற பகுதிகள் தடை செய்யப்பட்ட கேரளா உள்ளிட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் அதிகளவிள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, உத்தமபாளையம் போலீஸாா் க. புதுப்பட்டி பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட போது, கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரைப் பிடித்து விசாரணை செய்தனா். அதில், சொசைட்டி தெருவைச் சோ்ந்த மகேஷ்வரன்(52) என்பதும், இவரிடம் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கேரளா லாட்டரிச்சீட்டுகள் மற்றும் ரூ.1,300 ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து மகேஷ்வரனை கைது செய்தனா்.