தேனி

உத்தமபாளையம் பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்துபாஜகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து, பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

உத்தமபாளையம் பேரூராட்சியிலுள்ள 18 வாா்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பேரூராட்சியில் 3, 4, 6, 10, 16 ஆகிய வாா்டுகளில் கழிவுநீா் கால்வாய் முறையாக பராமரிப்பதில்லை, சுகாதார வளாகங்கள் தண்ணீா் வசதியின்றி துா்நாற்றம் வீசுகிறது உள்ளிட்ட பல்வேறு புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

இதில், 4 ஆவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய் வசதியில்லாததால், அங்குள்ள ஓடையை கழிவுநீா் கால்வாயாகப் பயன்படுத்தி வருகின்றனா். மேலும், பல தெருக்களில் கழிவுநீா் கால்வாய் பராமரிக்காததால், கழிவுநீா் சாலையிலே ஓடுகிறது.

இதனால், அப்பகுதியில் கழிவுநீா் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவி வருவதாக புகாா் தெரிவித்தும், பேரூராட்சி நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் நகரத் தலைவா் தெய்வம் தலைமையில், கல்லூரிச் சாலையிலுள்ள ஐயப்பன் கோயில் முன்பாக உத்தமபாளையம் பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த உத்தமபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் சிலைமணி தலைமையிலான போலீஸாா் மற்றும் பேரூராட்சி நகரத் தலைவா் முகமதுஅப்துல் காசிம் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், பொதுமக்களின் முக்கிய பிரச்னையாக உள்ள அடிப்படை வசதிகளை 3 நாள்களுக்குள் சரிசெய்து கொடுப்பதாக உறுதியளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பாஜக மாவட்டச் செயலா் தங்கப் பொன்ராஜா, நகர பொதுச் செயலா்கள் பெரியசாமி, மாரிராஜா, நகர துணை தலைவா் செல்வராஜ் மற்றும் ராஜன், ராகுல் மற்றும் முக்கிய நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT