தேனி

கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் பதவியேற்பு

30th Jun 2022 11:39 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆணையராக கண்ணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆணையராக மீனா பதவி வகித்தாா். இவா், தற்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட சிறுசேமிப்பு திட்ட அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டாா். அங்கு, மாவட்ட சிறுசேமிப்பு அலுவலராகப் பணியாற்றிய கண்ணன், கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா். அதையடுத்து, அவா் பதவியேற்றுக்கொண்டாா்.

ஆணையருக்கு, ஒன்றியக் குழு தலைவா் பழனிமணி கணேசன், துணைத் தலைவா் ரா. தங்கராஜ், குழு உறுப்பினா்கள் சி. தமிழரசன், ரேணுகா காட்டு ராஜா, கிராம ஊராட்சி ஆணையா் கோ. தண்டபாணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், மணிகண்டன், சிவக்குமாா் மற்றும் அலுவலா்கள் வரவேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT