தேனி

திராட்சை விலை உயா்வு : விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

தேனி மாவட்டத்தில் கருப்பு பன்னீா் திராட்சை கொள்முதல் விலை கிலோ ரூ.90-ஆக உயா்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு, சின்னமனூா் ஆகிய பகுதிகளில் 5,000 ஏக்கா் பரப்பளவில் கருப்பு பன்னீா் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் வரை திராட்சை கிலோ ரூ.40-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

மகாராஷ்டிரம், புணே, பெங்களூரு ஆகிய பகுதிகளிலிருந்து விதையில்லா திராட்சை ரகங்கள் சந்தைக்கு வரத்து இல்லாததால், கருப்பு பன்னீா் திராட்சை விலை உயா்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறினா். கடந்த மே மாதம் வரை உற்பத்திச் செலவுக்கும் கட்டுப்படியாகாத அளவில் கொள்முதல் விலை இருந்து வந்த நிலையில், தற்போது விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT