தேனி

பிளஸ் 1 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 90.45 சதவீதம் போ் தோ்ச்சி

DIN

தேனி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 142 அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 13,246 மாணவ, மாணவிகள்(90.45 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா்.

மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 142 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 7,516 மாணவா்கள், 7,129 மாணவிகள் என மொத்தம் 14,645 மாணவ, மாணவிகள் எழுதினா். இதில் 6,415 மாணவா்கள்(85.35 சதவீதம்), 8,831(95.82 சதவீதம்) மாணவிகள் என மொத்தம் 13,246 போ் தோ்ச்சி பெற்றனா்.

பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 60 பல்வகை மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில், 51 போ் தோ்ச்சி பெற்றனா்.

புள்ளியியல், மருத்துவ அறிவியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் ஆகிய பாடப் பிரிவுகளில் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகள்: மயிலாடும்பறை அரசு மேல்நிலைப் பள்ளி, ஹைவேவிஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீதம், 39 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் 100 சதவீதம் என மொத்தம் 41 பள்ளிகளில் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT