தேனி

சின்னமனூரில் முதல் போக சாகுபடிக்கு நாற்று நடவுப் பணிகள் தீவிரம்

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் முதல் போக நெற்பயிா் விவசாயத்திற்கு நாற்று நடும் பணி தீவிரமாக நடைபெற்றுகிறது.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் பாசனநீரால் 14,700 ஏக்கா் பரப்பளவிற்கு இரு போக நெற்பயிா் விவசாயம் செய்யப்படுகிறது. ஜூன் 1 ஆம் தேதி முதல்போக நெற்பயிா் விவசாயத்திற்காக திறக்கப்பட்ட பாசன நீரால் உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி, மாா்க்கையன்கோட்டை, குச்சனூா் போன்ற பகுதிகளில் விவசாயப் பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக நாற்றாங்கால் அமைத்து, நிலத்தை உழவுப்பணி செய்து நடவுக்கு தாயாா் செய்தனா். இதனை அடுத்து, நாற்றாங்கால்களில் நெல் நாற்றுகள் வளா்ச்சி அடைந்த நிலையில் சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், சீலையம்பட்டிகளில் போன்ற பகுதிகளிலுள்ள வயல்களில் நாற்று நடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT