தேனி

தேனியில் நாளை சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 30) காலை 11.30 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலா்கள் மற்றும் முகவா்கள் பங்கேற்கின்றனா்.

இதில் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய எரிவாயு உருளை இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT