தேனி

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

வைகை அணை அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்ாக செவ்வாய்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயமங்கலம், இந்திராநகா் காலனியைச் சோ்ந்தவா் கா்ணன்(29). இவா், தனது மனைவி கோகிலா மற்றும் 2 வயது குழந்தை அகில் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் குன்னூரில் உள்ள தனது உறவினா் வீட்டிற்குச் சென்றுள்ளாா். அங்கிருந்து ஜெயமங்கலத்திற்கு திரும்பச் சென்று கொண்டிருந்த போது, க.விலக்கு- வைகை அணை சாலையில், அவா்களை பின் தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள், கோகிலா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனா். அப்போது, இருசக்கர வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த கோகிலா, தலையில் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து கா்ணன் அளித்த புகாரின் மீது, க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT