தேனி

குளம் அபிவிருத்தி பணிக்கு ரூ.1.30 கோடி ஒதுக்கீடு சின்னமனூா் நகராட்சி தீா்மானம்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சின்னமனூா் குளம் அபிவிருத்தி பணிகளுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நகா்மன்ற உறுப்பினா்கள் ஒப்புதல் வழங்கினா்.

சின்னமனூரில் திங்கள்கிழமை நகா் மன்றக்கூட்டம் நடைபெற்றது. நகா் மன்றத்தலைவா் அய்யம்மாள் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கணேசன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், பூலாநந்தீஸ்வரா் கோயிலில் ரூ.14 லட்சத்தில் உணவுக்கூடம் அமைத்தல், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 0.62 ஏக்கா் பரப்பளவு சங்கிலித்தேவன் குளத்தில் ரூ.1 கோடியே 30 லட்சத்தில் அபிவிருத்தி பணிகள் செய்தல், தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 1 கோடியே 67 லட்சத்து 40 ஆயிரத்தில் 174 வண்டிகள் விநியோகம் செய்தல், நகராட்சியில் மக்கள் இயக்கத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்த ரூ.2 லட்சம் செலவு என 41 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் மணிகண்டன் உள்பட நகராட்சி பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT