தேனி

தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஆய்வு

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் புதிய சாலை அமைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை களஆய்வு மேற்கொண்டனா்.

தேனி மாவட்டம் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையான, கடந்த 2011-12 ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயா்த்தப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

அதையடுத்து, சின்னமனூா், உத்தமபாளையம், கம்பம் ஆகிய நகரங்களுக்குள்ளே செல்லும் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு குறித்து ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. அதில், நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பொறியாளா் மாரிமுத்துராஜன், உத்தமபாளையம் உதவிக் கோட்டப் பொறியாளா் குமணன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

மேலும், மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காமல் வழிந்தோடும் வகையில் நவீன சாலை அமைப்பு, சாலையோரங்களில் கழிவு நீா் கால்வாய் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

SCROLL FOR NEXT