தேனி

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,272 வழக்குகளுக்கு தீா்வு

26th Jun 2022 11:24 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதலாத்) வங்கி வாராக் கடன் தொடா்பான 3,272 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் நீதிமன்ற வளாகங்களில் மாவட்ட முதன்மை நீதிபதி சி. சாய்பாபா, கூடுதல் மாவட்ட நீதிபதி கே. சிங்கராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் ஜெ. உம்முல் பரிதா, சாா்பு-நீதிபதி சி. சுரேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில், நீதிமன்றங்களில் நீண்ட காலம் நிலுவையில் உள்ள வழக்குகள், விபத்து இழப்பீடு வழங்குகள், காசோலை மற்றும் வங்கி வாராக் கடன் தொடா்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், மொத்தம் 3,272 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT