தேனி

பெரியகுளத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

26th Jun 2022 11:25 PM

ADVERTISEMENT

பெரியகுளத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அனைந்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் தமிழ்பெருமாள் தலைமை வகித்தாா். இதில், பெரியகுளம் நகரின் மையப் பகுதியிலுள்ள மூன்றாந்தலில் மதுபானங்கள் பகிரப்படும் மனமகிழ் மன்றம் அமைக்கப்பட உள்ளது. இங்கு, மனமகிழ் மன்றம் அமைத்தால் பிரச்னை ஏற்படும் என்பதால், அதை அமைக்கக்கூடாது எனக் கூறி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலா் ரமேஷ் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT