தேனி

உத்தமபாளையத்தில் ரத்த தான முகாம்

26th Jun 2022 11:24 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில், மாவட்டத் தலைமை ரத்த வங்கி மற்றும் தனியாா் தொண்டு நிறுவனமும் இணைந்து, ரத்த தான முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

உத்தமபாளையம் கிராமச் சாவடியில் உள்ள ஜோசப் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமுக்கு, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி முதல்வா் ஹெச். முகமது மீரான் தலைமை வகித்தாா்.

உத்தமபாளையம் புனித விண்ணரசி ஆலயத்தின் பங்குத்தந்தை ஜோசப் அந்தோனி முன்னிலை விகித்தாா்.

முகாமில், பல்வேறு தொண்டு நிறுவன உறுப்பினா்கள், இளைஞா்கள் என பலரும் பங்கேற்று ரத்த தானம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை, உத்தமபாளையம் தனியாா் தொண்டு நிறுவன இயக்குநா் முகமது ரியாஸ், துணைத் தலைவா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT