தேனி

கஞ்சா விற்ற 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

25th Jun 2022 11:16 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் சீப்பாலகோட்டை, சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ற 2 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சனிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் உத்தரவிட்டாா்.

சீப்பாலகோட்டையைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகன் குமரேசன்(37). சீலையம்பட்டியைச் சோ்ந்தவா் அழகுமலை மகன் அப்துல்லா(61). இவா்கள் அதே பகுதியில் கஞ்சா விற்றதாக கடந்த மே மாதம் போலீஸாா் கைது செய்தனா். கஞ்சா விற்பனை தொடா்பாக பல்வேறு வழக்குகளில் சிக்கிய இவா்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT