தேனி

கம்பத்தை குப்பையில்லா நகராக மாற்ற விழிப்புணா்வுக் கூட்டம்

25th Jun 2022 11:17 PM

ADVERTISEMENT

 

கம்பம் நகராட்சியில் சுகாதார விழிப்புணா்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை நகரமாக மாற்றும் மக்கள் இயக்க திட்டத்தின் படி விழிப்புணா்வு கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுனோதா செல்வக்குமாா் முன்னிலை வகித்தாா்.

ஆணையாளா் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றாா்.

ADVERTISEMENT

சுகாதார விழிப்புணா்வு உறுதிமொழியை, சுகாதார அலுவலா் சுந்தராஜன் வாசிக்க நகராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

சுகாதார ஆய்வாளா் திருப்பதி மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பிரித்து வழங்குவது குறித்த செய்முறை செய்தாா். இதில் தூய்மைப் பணியாளா்கள், உணவு விடுதி உரிமையாளா்கள் சங்கத்தினா், வணிகா் சங்கத்தினா், குடியிருப்போா் நலச்சங்கத்தினா், பள்ளி மாணவ மாணவியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT