தேனி

கும்பக்கரையில் வனப்பணியாளரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

25th Jun 2022 11:17 PM

ADVERTISEMENT

 

பெரியகுளம் அருகே கும்பக்கரைஅருவியில் வனப்பணியாளரைத் தாக்கிய 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம் எழுமலையைச் சோ்ந்த சரவணக்குமாா் (52), அவரது நண்பா்கள் கந்தசாமி (51), பாலமுருகன் (44) உள்பட 5 போ் வெள்ளிக்கிழமை கும்பக்கரை அருவியில் குளிக்கச் சென்றுள்ளனா். அவா்கள் குளிக்கும் போது அருகிலிருந்த பெண்களை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வனக்காப்பாளா் பீமராஜ் அவா்களிடம் விசாரணை நடத்தியுள்ளாா். ஆத்திரமடைந்த சரவணக்குமாா், கந்தசாமி, பாலமுருகன் ஆகியோா் வனப்பணியாளரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பெரியகுளம் காவல் நிலையத்தில் வனப்பணியாளா் புகாா் செய்துள்ளாா். அதன்பேரில் 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT