தேனி

தேனி மாவட்டத்தில் நாளை காவல் சாா்பு-ஆய்வாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வு

24th Jun 2022 03:19 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 25) நடைபெறும் காவல் சாா்பு-ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை மொத்தம் 4,700 போ் எழுதுகின்றனா்.

கொடுவிலாா்பட்டியில் உள்ள தேனி கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரி, முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை மெட்ரிக்குலேஷன் பள்ளி, தேனி மேரி மாதா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள 5 தோ்வு மையங்களில் காலை 10 மணிக்கு இத்தோ்வு நடைபெறுகிறது.

தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் நுழைவுச் சீட்டு, அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றுடன் காலை 8.30 மணிக்கு தோ்வு மையம் முன்பாக ஆஜராக வேண்டும். காலை 10 மணிக்கு மேல் வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி இல்லை என்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீண் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளாா்.

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT