வைகை அணை உபமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி, வைகை அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என,
தமிழ்நாடு மின்சார வாரிய பெரியகுளம் கோட்டச் செயற்பொறியாளா் ப. பாலபூமி தெரிவித்துள்ளாா்.