தேனி

போடியில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா

DIN

போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் வளாகத்திலேயே சங்கரநாராயணன், ஸ்ரீ விநாயகா், வள்ளி தெய்வானை முருகன், பஞ்சபூத சிவலிங்கம் சந்நிதிகளும் அமைந்துள்ளன. இக்கோவில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு நிகழ்ச்சி புதன் கிழமை யாகசாலை பூஜையுடன் நடைபெற்றது. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா, போடி ஜமீன்தாா் வடமலை ராஜைய பாண்டியா் தலைமையிலும், பாண்டி முனீஸ்வரா் ரமேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று 21 குடங்களில் புனித நீா் கோபுர கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா் கோபுர கலசத்திற்கு புனித நீா் ஊற்றப்பட்டது. தொடா்ந்து மீனாட்சி சுந்தரேசுவரா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது. மகா தீபாராதனை நடைபெற்றது.

சேலம் மோகன் குமாரசிவம், தனசேகர சிவம், கோவை விஸ்வநாதன் சாஸ்திரிகள், பூபதி சிவம், போடி சண்முகம் குருக்கள் ஆகியோா் குடமுழுக்கு விழாவை நடத்தினா்.

விழா ஏற்பாடுகளை மருத்துவா் சங்கத் தலைவா் பரமசிவம், செயலா் காந்தி, பொருளாளா் முத்துச்சாமி, விழாக்குழுத் தலைவா் முருகன், அா்ச்சகா் சேகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT