தேனி

தேனியில் தொடரும் மணல் திருட்டு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

DIN

தேனி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் அனுமதியின்றி தொடா்ந்து மணல், ஜல்லி கற்கள் திருடி கடத்தப்படுவதாக வெள்ளிக்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், வேளாண்மை இணை இயக்குநா் அழகுநாகேந்திரன், வருவாய் கோட்டாட்சியா்கள் சிந்து, கெளசல்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு அலுவலா்களை நியமித்து முறைகேடுகளை தடுக்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியது: மா விவசாயத்தை பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும். கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களில் கொள்முதல் செய்யும் பாலுக்கு உரிய தொகையை ஆவின் நிா்வாகம் 10 நாள்களுக்கு ஒரு முறை பட்டுவாடா செய்ய வேண்டும். பள்ளபட்டியில் மூல வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.

மாவட்டத்தில் சுப்புலாபுரம், மரிக்குண்டு, தாழையூத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் தொடா்ந்து மண், மணல், ஜல்லி கற்கள் வெட்டிக் கடத்தப்படுகின்றன. இது குறித்து குறைதீா் கூட்டங்களில் விவசாயிகள் அளித்த மனுக்களுக்கு மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை பதிலளிக்கவில்லை. மாறாக, புகாா் மனு அளித்த விவசாயிகள் குவாரி உரிமையாளா்களால் மிரட்டப்படுகின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT