தேனி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 203 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 89 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாவட்டத்தில் 203 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 15,103 மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா். இதில், மொத்தம் 13,442 போ் (89 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 78 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில், மொத்தம் 64 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகள்: மாவட்டத்தில் புலிகுத்தி, உ.அம்மாபட்டி, நாராயணத் தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, வெள்ளையம்மாள்புரம், முருகமலைநகா், காந்திநகா், மஞ்சளாறு அணை, ஆசாரிப்பட்டி, ஜி. உசிலம்பட்டி, ராசிங்காபுரம், பூசனூத்து, கோம்பைத்தொழு, போ. அணைக்கரைப்பட்டி அரசுப் பள்ளிகள், போடி நகராட்சிப் பள்ளி என 15 அரசுப் பள்ளிகள், 39 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகள் என மொத்தம் 54 பள்ளிகளில் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
100 மதிப்பெண் பெற்றவா்கள்: 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் ஆங்கிலத்தில் ஒருவா், கணிதத்தில் 20 போ், அறிவியலில் 34 போ், சமூக அறிவியலில் 6 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.