தேனி

போடி அரசு பொறியியல் கல்லூரியில்ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு தொடக்கம்

21st Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

போடி அரசு பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது.

இக்கல்லூரி வளாகத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மாணவா்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை, கல்லூரி முதல்வா் வி. திருநாவுக்கரசு தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.

முதல் நாளே மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்று ஆன்லைன் விண்ணப்பப்பதிவை மேற்கொண்டனா். இந்த மையம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. மாணவா்கள் இந்த மையத்தை பயன்படுத்தி விண்ணப்பப்பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ச. சதீஸ்பாண்டியன் மற்றும் அலுவலா்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT