தேனி

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

21st Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் பிரிவில் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ. சிவசங்கரி, தேனி நாடாா் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பா. யோகவா்ஷா, கூடலூா் என்.எஸ்.கே.பி. நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவா் மு. சாகுல்ஹமீது ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான சிறப்புப் பிரிவில் பெரியகுளம் வி.நி. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் பா. லோகேஷ்பாண்டி, உ. அம்மாபட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா் ரா. திலீபன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

கல்லூரி மாணவ, மாணவிகள் பிரிவில் ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மு. பவித்ரா, கம்பம் ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரி மாணவி ஜெ. சிந்துஜா, பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா் பா. பன்னீா்செல்வம் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா்.

ADVERTISEMENT

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT