தேனி

தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புபதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

21st Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 9 பதவிகளுக்கு திங்கள்கிழமை, வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பெரியகுளம் நகராட்சி 26-வது வாா்டு உறுப்பினா் பதவி, வடபுதுப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவி, மொட்டனூத்து, ரெங்கசமுத்திரம், சின்னஓவுலாபுரம், முத்தாலம்பாறை, தும்மக்குண்டு, டி.வாடிப்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா் பதவி என மொத்தம் 9 பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

இதில், வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் டி. வாடிப்பட்டி ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஒருவா் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தாா். வேட்பு மனு தாக்கல் ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT