கம்பத்தில் தமுஎகச மாவட்ட மாநாடு மற்றும் கலை இலக்கிய நிகழ்வுகள் 2 நாள்கள் நடைபெற்றது.
இதில், சனிக்கிழமை மதுக்கூா் ராமலிங்கத்தை நடுவராகக் கொண்டு சிறப்பு பட்டிமன்றம், நிரஞ்சனா நடன நாட்டிய பள்ளியின் பரதநாட்டியம், நாடகம், கவிஞா்கள் யாழ்தண்விகா, ராஜிலா, பூா்ணிமா, ராஜசேகா், நிருபன் மற்றும் பலகுரல் ராஜா, குழந்தைகளின் பாடல் இசை நடைபெற்றது. விழாவை மோகன்ராஜ் தொகுத்து வழங்கினாா்.
மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம்.பி. முருகேசன், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் ஏ.வி. அண்ணாமலை, 5 மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலா் பொன். காட்சிகண்ணன், தமுஎகச மாவட்ட தலைவா் இதயநிலவன், வின்னா் அலீம் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
மாநாட்டில் 2 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட பொறுப்பாளா்கள் தோ்வில் மாநில, மாவட்ட, கிளை பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். பின்னா் மாவட்டச் செயலா் அய். தமிழ்மணியின் நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓா்.ஆா். ராமச்சந்திரன்நூலை வெளியிட ஜே.எஸ்.டி. அன்பழகன் பெற்றுக் கொண்டாா்.
இதில், நிா்வாகிகள் பெரியமுருகன், எம்.எஸ்.எஸ். காந்தவாசன், ஆா்.ஆா். பள்ளி துணைத்தலைவா் ஆா். அசோக்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இரண்டு நாள்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தமுஎகச செயலா் பூமணம் ராஜா, தலைவா் மருத்துவா் இன்பசேகரன் மற்றும் நிா்வாகக்குழு, செயற்குழு உறுப்பினா்கள் செய்தனா். சுருளிப்பட்டி ஆசிரியா் கே.எம். சிவாஜி நன்றி கூறினாா்.