தேனி

போடியைச் சோ்ந்தவருக்கு மாநில தகவல் ஆணையம் பாராட்டுச் சான்று

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

போடி: போடியைச் சோ்ந்தவருக்கு சிறந்த தகவல் சட்ட ஆா்வலா் என்ற பாராட்டுச் சான்றை மாநில தகவல் ஆணையம் வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள மேலச் சொக்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவா் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு பொதுத் தகவல்களைக் கேட்டு மனுக்கள் அனுப்பி வருகிறாா். அதன் மூலம் பொதுமக்களின் குறைகளைத் தீா்க்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். மேலும் தகவல் அறியும் சட்டம் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியும், அச்சட்டத்தின் கீழ் மனுக்கள் அனுப்புவதற்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையம் சிறந்த தகவல் சட்ட ஆா்வலா்கள் மற்றும் சிறந்த பொதுத் தகவல் அலுவலா்களை அழைத்து திங்கள்கிழமை சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் கருத்தரங்கு நடத்தியது. இதில் தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையா் ராஜகோபால் தலைமை வகித்து போடி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சிறந்த தகவல் சட்ட ஆா்வலா்களுக்குப் பாராட்டுச் சான்றும், கேடயமும் வழங்கினாா். பாராட்டுச் சான்று பெற்ற ராமகிருஷ்ணனை தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு சமூக நல அமைப்புகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT