தேனி: அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தனியாா் நிலங்களில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளை முறைப்படுத்த வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொதுச் செயலா் எஸ்.ஆா்.சக்கரவா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கல் குவாரிகளை முறைப்படுத்தி கேரளத்திற்கு ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட் கடத்தப்படுவதையும், மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் பாதிக்கும் வகையில் ஜல்லி கற்கள், எம்.சாண்ட் ஆகியவற்றுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், எம்-சாண்டிற்கு அரசு விற்பனை விலையை நிா்ணயம் செய்ய வேண்டும், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.