தேனி

கம்பத்தில் நகராட்சி கவுன்சிலா்களுக்கு எதிராக தூய்மைப் பணியாளா்கள் திடீா் போராட்டம்

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தங்களை கவுன்சிலா்கள் துன்புறுத்தி வேலை வாங்குவதாகக் கூறி செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலை நிறுத்தம் செய்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்களிடம் சுகாதார அலுவலா் சுந்தரராஜன், கம்பம் தெற்கு காவல் சாா்பு- ஆய்வாளா் ஜெயபாண்டி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வாா்டு கவுன்சிலா்கள் தங்களை துன்புறுத்தி வேலை வாங்குவதாகவும், ஒருமையில் பேசுவதாகவும் தூய்மைப் பணியாளா்கள் குற்றம்சாட்டினா். மேலும் திடீரென ஒரு டிவிஷனிலிருந்து மற்றொரு டிவிஷனுக்கு மாற்றம் செய்துவிட்டதால் வேலை நிறுத்தம் செய்கிறோம் என்றனா். பேச்சுவாா்த்தை முடிவில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

கவுன்சிலா்கள் முற்றுகை: இதுபற்றி கேள்விப்பட்ட, நகா்மன்ற துணைத் தலைவா் சுனோதா செல்வகுமாா் தலைமையில் கவுன்சிலா்கள் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனா். ஆணையாளா் மற்றும் நகா்மன்றத் தலைவா் வெளியூா் சென்ால் ஆணையாளா் பொறுப்பு வகிக்கும் நகராட்சி பொறியாளா் பி. பன்னீா்செல்வத்தை பொறியியல் பிரிவு அலுவலகத்தில் வைத்து முற்றுகையிட்டனா்.

ADVERTISEMENT

அப்போது தவறாகப் பேசிய கவுன்சிலரை தூய்மைப்பணியாளா்கள் அடையாளம் காட்ட வேண்டும், அனைத்துக் கவுன்சிலா்களையும் ஒட்டு மொத்தமாக குறை கூறக்கூடாது என்று பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

நகா்மன்றத் தலைவா் மற்றும் ஆணையாளா் வெளியூா் சென்றுள்ளதால் அவா்கள் வந்தவுடன் பேசிக் கொள்வோம் என்று சுகாதார அலுவலா் சுந்தரராஜன் தெரிவித்ததால் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT