தேனி

கம்பம் லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு

14th Jun 2022 02:52 PM

ADVERTISEMENT

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில், செவ்வாய்க்கிழமை மின்சார உற்பத்தி அதிகரித்தது. கடந்த ஜூன் 1-ல் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர்  விநாடிக்கு 300 கன அடியாக திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் மூலம் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள 4 மின்னாக்கிகளில், 1 மின்னாக்கி மட்டும் இயக்கப்பட்டு,  27 மெகாவாட் மின்சார உற்பத்தி தொடங்கியது. 

இதையும் படிக்க: லாலுவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி

பின்னர் ஜூன் 5-ல், அணையிலிருந்து விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், பெரியாறு மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 37 மெகாவாட்டாக, மின்சாரம் உற்பத்தி அதிகரித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அணையிலிருந்து, விநாடிக்கு, 500 கன அடியாக அதிகரித்து, அதன் மூலம் 45 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அணை நிலவரம்

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 131.15 அடி (மொத்த அடி 142), அணைக்குள் நீர் இருப்பு 4,966 மில்லியன் கன அடி, நீர்வரத்து விநாடிக்கு, 137 கன அடி, தமிழகப் பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 500 கன அடி, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 1.6 மில்லி மீட்டர் மழையும் மற்றும் தேக்கடி ஏரியில் 0.4 மி.மீ., மழையும் பெய்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT