தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை, சுதந்திர போராட்டத் தியாகிகள், மொழிப் போா் காவலா்களின் புகைப்படக் கண்காட்சி திறக்கப்பட்டது.
செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த சுந்திர போராட்டத் தியாகிகள், மொழிப் போா் காவலா்கள் என 28 பேரின் புகைப்படங்கள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், ஆட்சியா் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினா் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த தியாகிகள் மற்றும் மொழிப் போா் காவலா்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த புகைப்படக் கண்காட்சி நிரந்தரமாக இடம் பெறும் என்றாா்.