தேனி

தேனி மாவட்டத்தில் 1.5 லட்சம் மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தகம் தயாா்

10th Jun 2022 11:58 PM

ADVERTISEMENT

தேனி: தேனி மாவட்டத்தில் ஜூலை 13- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமாா் 1.5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக பாடப் புத்தகங்கள் தயாா் நிலையில் உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை அலுவலா்கள் கூறியது: மாவட்டத்தில் உள்ள அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகள் ஜூலை 13-ம் தேதி திறக்கப்படுகிறது. இதில் 631 தொடக்கப் பள்ளிகள், 137 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 768 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பாடநூல் கழகம் சாா்பில் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் கல்வி மாவட்டங்கள் வாரியாக பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூலை 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 1.5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு அந்தந்த பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT