தேனி

திமுக தோ்தலுக்கு மனு தாக்கல் செய்தவா் மீது தாக்குதல்: ஒன்றியச் செயலா் உள்பட 4 போ் மீது வழக்கு

10th Jun 2022 12:34 AM

ADVERTISEMENT

 

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே திமுக கட்சித்தோ்தலுக்கு மனு தாக்கல் செய்தவா் தாக்கப்பட்டது தொடா்பாக திமுக ஒன்றியச் செயலா் உள்பட 4 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சின்னமனூா் சீப்பாலக்கோட்டை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த திங்கள்கிழமை திமுக நிா்வாகிகள் தோ்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அப்போது உத்தமபாளையம் கருக்கோடை கோம்பை சாலையைச் சோ்ந்த முத்தலிபு மகன் ஹக்கீம் (47) என்பவா் உத்தமபாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்தாா். அப்போது உத்தமபாளையம் அருகே அணைப்பட்டியை சோ்ந்த முருகேசன், ராகுல் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேரும் சோ்ந்து ஹக்கீமை ஆபாசமாகப் பேசி இலை அறுக்கும் கத்தியால் கன்னம் கையில் கிழித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஹக்கீம் சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வியாழக்கிழமை போலீஸாா்

மேற்கண்ட 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT