போடி: போடியில் வீடு புகுந்து பணம் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
போடி நகராட்சி காலனியில் வசிக்கும் சக்திவேல் என்பவரது மனைவி சிவகாமி (23). சிவகாமி வெளியில் சென்றிந்தபோது பக்கத்து வீட்டைச் சோ்ந்த மணி மகன் சிவமணி (33) வீடு புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.5500 ரொக்கத்தை திருடிக் கொண்டு சென்றுவிட்டாராம். போடி நகா் காவல் நிலையத்தில் சிவகாமி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சிவமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.