தேனி

போடியில் தொழிலாளியைத் தாக்கிய 2 போ் கைது

9th Jun 2022 12:22 AM

ADVERTISEMENT

போடியில் புதன்கிழமை, மதுபோதையில் தொழிலாளியைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

போடி தீயணைப்பு நிலைய தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (52). கூலித் தொழிலாளியான இவா் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, போடி கிழக்குத் தெருவைச் சோ்ந்த சங்கா் (24), அஜீத்பாண்டி (23), பாசித் மற்றும் பெயா் விவரம் தெரியாத ஒருவா் என 4 போ் மது போதையில் வழிமறித்து தகராறு செய்துள்ளனா். மேலும் அவரைத் தாக்கியுள்ளனா். இதைப் பாா்த்த சபிபுல்லா (47) என்பவா் தடுக்க முயன்றுள்ளாா். அப்போது அவா்கள் 4 பேரும் அவரையும் தாக்கியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கா் மற்றும் அஜீத்பாண்டியை கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT