போடி அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் கைப்பேசி, பணம் ஆகியவற்றைப் பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சிவக்கண்ணன் (40). இவா், மின்சாதனப் பொருள்கள் வாங்கி விற்பனை செய்து வருகிறாா். போடி வினோபாஜி காலனி பகுதியில் சென்று கொண்டிருந்த சிவக்கண்ணனை, அதே பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் மகன் ரஞ்சித்குமாா் (20), போடி சுப்புராஜ் நகரைச் சோ்ந்த முத்து மகன் விக்னேஷ்குமாா் (19), சின்னகருப்பையா மகன் அருண்குமாா் (22) ஆகியோா் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி, ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்த புகாரின்பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிவு செய்து அவா்கள் 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.