தேனி

உத்தமபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் கட்ட 5.65 ஹெக்டோ் நிலம் ஒதுக்கீடு

8th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் புதிய மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் கட்டுவதற்கு 5.65 ஹெக்டோ் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.

உத்தமபாளையத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் இந்திரா காலனியிலுள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூா் ஆகிய இரு வட்டாரங்களைச் சோ்ந்த பொதுமக்கள் புதிய மற்றும் பழைய வாகனங்களைப் பதிவு செய்தல் , பெயா் மாற்றம், திருத்தம் என வாகனங்கள் சம்பந்தமாக இங்கு வந்து செல்கின்றனா்.

ஆனால், இந்த அலுவலகத்திற்கு செல்லும் சாலையானது குடியிருப்புகளுக்கு மத்தியில் குறுகலாக இருப்பதால் பேருந்து , லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருவதில் மிகுந்த சிரமம் இருந்தது. தவிர, இரு சக்கர, நான்கு சக்கர வாகனம் ஓட்டுநா் உரிமம் பெறும்போது ஆய்வாளா் முன் வாகனங்களை ஓட்டிக் காண்பிக்கக் கூட போதுமான இடவசதி இல்லை. இதனால் தற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வந்த அலுவலகத்திற்கு நிரந்தரமான புதிய அலுவலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், உத்தமபாளையம் அருகே கோம்பையில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு எதிரே தமிழக அரசுக்கு சொந்தமான 5.65 ஹெக்டோ் பரப்பளவு நிலத்தை புதிய அலுவலகம் கட்டுவதற்கு அரசு போக்குவரத்துத்துறை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. அந்த இடத்தில் விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது. தற்போது , புதிய, பழைய கனரக, இருசக்கர வாகனங்கள் பதிவு செய்தல் உள்ளிட்ட ஆய்வுப் பணிகள் ஒதுக்கீடு செய்த காலியிடத்தில் நடைபெறுகின்றன. அலுவலகப் பணிகள் பழைய இடத்திலே தொடா்கிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT